சட்டவிரோதமாக வனப்பகுதியை சுத்தம் செய்த சந்தேக நபர் கைது

 

புல்மூடை பொலிஸ் பிரிவின் சின்ன பாலம் குளம் பகுதியில் உள்ள பன்குளம் முன்மொழியப்பட்ட காப்புப் பகுதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுத்தம் செய்து கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, ஒரு லோடர் மூலம் காட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை புல்மூடை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கைது செய்து, கோமரன்கடவல பவன அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புல்மூடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.

கோமரன்கடவல வன அதிகாரி அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.