யாத்திரை சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம் ஜேதவனாராமயவுக்கு அருகில் உள்ள முதியோர் மண்டபத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த பேருந்து பலாங்கொடையில் இருந்து அனுராதபுரத்திற்குப் புனித யாத்திரைக்காகத் தெரிவிக்கப்படுகிறது.