கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் : பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி சட்டத்தரணியாக வேடமிட்டு வந்த பெண் சந்தேக நபருடன் காதல் கொண்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்தது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இந்த சந்தேக நபர், நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும், குற்றப்பிரிவில் நீதிமன்றக் கடமைகளைச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியும், சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாக உள்ள சந்தேக நபரான பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்கவும் காதலர்கள் எனவும், அவருடன் தொலைப்பேசி உரையாடலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.