பாதாள உலகச் செயற்பாடுகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்!

எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கிறார்.

பாதாள உலகத்தை முற்றிலும் அழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்