பலசரக்குக்கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அம்பாறை நிறுபர்

பலசரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்களில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்கர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபா 20000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் ஆலோசனைக்கமைய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் நேற்று புதன் கிழமை சம்மாந்துறை புற நகர் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பல சரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்களில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக  10000, 5000, 5000 தண்டப்பணம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அறவீடு செய்யப்பட்டது.

இதன் போது வண்ண குறியீடு (colour code) இடப்படாத உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்டது.எதிர் வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு மக்களுக்கு சிறந்த உணவுப் பொருட்களை வழங்கும் பொருட்டு தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

சரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
சரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை