
கிழக்கின் அபிவிருத்தியை பக்கத்து வீட்டார் பார்த்துக்கொள்வார்கள் என்கிறது பாதீடு!
கிழக்கின் அபிவிருத்தியை அயல் நாடு பார்த்துக்கொள்ளும் என்ற வகையில் பாதீடு அமைந்துள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வடக்கும் தெற்கும் பரிபூரணமான சகோதரத்துவத்தோடு கைகோர்ப்பதற்கு யுத்தத்தின் பின்னர் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதோடு இனிமேலும் இவ்வாறானதொரு நிலை ஏற்படக்கூடாது என சுட்டிக்காட்டினார்.
மேலும் எழுவாங்கரை மற்றும் படுவாங்கரை ஆகிய பகுதிகள் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
