கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளம் – பாலாவியில் வைத்து குறித்த சந்தேகநபரை பொலிஸாரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே 5 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.