முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது மகனும் கைது!

புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகன் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.