இந்த அரசாங்கத்தின் வெற்றிக்கு அதிகளவில் பங்களிப்பு செய்தவர்கள் அரச உத்தியோகத்தர்கள்!

இந்த அரசாங்கத்தின் வெற்றிக்கு அதிகளவில் பங்களிப்பு செய்தவர்கள் அரச உத்தியோகத்தர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏம் ஹிஸ்புல்லா இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எனினும் அரசாங்கத்தின் வெற்றிக்குப் பங்களித்த அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்பார்த்த அளவு அமையவில்லை என ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்கள் மத்தியில் இது கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஹிஸ்புல்லா கூறினார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கென பாதீட்டில் எந்தவொரு விசேட நிதியும் ஒதுக்கப்படவில்லை என கூறினார்.