
பொலிவியாவில் பேருந்து மோதி விபத்து
பொலிவியாவில் மலைப்பாதையில் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்.
யோகல்லாவின் தென்மேற்கு மாவட்டத்திலுள்ள பள்ளத்தாக்கில் வாகனம் கிட்டத்தட்ட 800 மீட்டர் (2625 அடி) பள்ளத்தில் கவிழ்ந்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
நான்கு குழந்தைகள் உட்பட பதினான்கு பேர் காயமடைந்ததாக உள்ளூர் மருத்துவமனை அதிகாரி காணொலியில் தெரிவித்துள்ளார்.
போடோசி மற்றும் ஒருரோ நகரங்களுக்கு இடையே விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வேகமாக வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஓட்டுநரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அதிகாரிகள் நம்புவதாக பொலீஸ் கர்னல் விக்டர் பெனாவிட்ஸ் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாட்டில் பதிவான மிக மோசமான சாலை விபத்து இது என நம்பப்படுகிறது.
காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனம் யூனிடெல் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் போடோசிக்கு அருகிலும் மற்றொரு பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்கத் தரவுகளின்படி சுமார் 12 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,400 பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர்.
