புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

புதுடெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.36 அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட இந்தியா முழுவதும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அந்த இந்தியாவின் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமியில் 5 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.