
மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணை காணவில்லை!
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும், 3 பிள்ளைகளின் தாய், கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக, உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணாமல் போன பெண், மூதூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காணாமல் போன பெண் தொடர்பில் தகவல் அறிந்தால், உடனடியாக கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்க்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0767824592
0753251281
மேலும், குறித்த பெண்ணை அழைத்து சென்ற சந்தேக நபர், கல்முனை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஐஸ் கிரீம் வியாபாரம் செய்பவர், என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
