நாட்டின் பல பகுதிகளிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவான வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இதன்படி, குறித்த பகுதியில் 36.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளும் அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.