சீகிரியாவை பார்வையிட வந்த பெண் : 7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

எழுநூறு மில்லியன் ரூபாய்க்கு அதிக மதிப்புள்ள குஷ் ரக போதைப்பொருட்களை சீகிரியா பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சீகிரியாவைப் பார்வையிட வருகை தந்த தாய்லாந்து பெண் ஒருவரிடமிருந்து இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தலா 600 கிராம் எடையுள்ள 23 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட பெண் விடுவிக்கப்பட்டு, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.