
மட்டக்களப்பில் பிரதான வீதியின் பாலத்தை உடைத்துக்கொண்டு நீரோடையில் விழுந்த கார்!
-வெல்லாவெளி நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில், கார் ஒன்று, வைக்கல பிரதான வீதியின் பாலத்தினை உடைத்து விபத்துக்குள்ளானது.
இன்று வியாழக்கிழமை பி.ப 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தின்போது, வேக கட்டுப்பாட்டை இழந்து கார், பாலத்தினை உடைத்து கொண்டு நீரோடையில் விழுந்துள்ளது.
இதன்போது, காரில் பயணித்த 03 பேர் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
