
தொலைபேசி பாவிக்க வேண்டாமென கண்டித்த தாய் : 15 வயது மகள் உயிரிழப்பு!
இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தான் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 20 ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்டதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சிறுமி, ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும், முந்தைய பரீட்சைகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
பெப்ரவரி 15 ஆம் திகதி ஆண்டுப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறுமி தனது தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதைக் கவனித்த சிறுமியின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சிறுமி, அடுக்குமாடி குடியிருப்பின் 20 ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
