
மட்டு.வாகரை கடலில் கரையொதுங்கிய பாரிய பொருள்!
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில், இன்று புதன்கிழமை கரையொதுங்கிய நிலையில், போயா என அழைக்கப்படும் பொருளொன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த கடற்கரையை அண்டிய பகுதியில், பொருளொன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள், அதனை இழுத்து கரைசேர்த்துள்ளனர்.
அண்மைக்காலமாக இவ்வாறான பொருட்கள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

