
ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு : இராணுவ வீரர்கள் இருவர் பலி!
இந்தியா-ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் அக்னுார் பகுதியில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவங்களும், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
