கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு-கொட்டாஞ்சேனையில் இன்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த 2 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 43 வயதான நபர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

தப்பிச் சென்றவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.