
வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி 87 ரூபாய் 92 சதமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி 87 ரூபாய் 43 சதமாக நிலவியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்திய ரூபாய் இதுவரை இந்தளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்ததில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்