கெகலிய ரம்புக்கல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்: விமல் ரட்நாயக்க தெரிவிப்பு

-யாழ் நிருபர்-

கெகலிய ரம்புக்கல பெற்ற நட்ட ஈட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்திருக்கலாம் என அமைச்சர் விமல் ரட்நாயக்க தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல் ரட்நாயக்க, பிற்பகல் கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிறை குறைகளை பார்வையிட்டு கலந்துரையாடினார்.

கிளீன் சிறிலங்கா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறித்த புகையிரத நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

இதன் போது ஊடகங்களுக்கு அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

பல கோடிகளை கெலிய பெற்றார், ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம், 7 லட்சம், இறுதியாக 10 லட்சம் என மட்டுமே வழங்கப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்ட நட்டயீட்டினை மாவட்டத்துக்கே வழங்கியிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் நாடு முழுவதும் காணப்படுகிறது. அது போல கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் போதாது. அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அந்த பிரச்சினைக்கு மக்களுடனும் கலந்துரையாடி தீர்வு எட்டப்பட வேண்டும். அதனை விரைவில் செய்வோம்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24