சர்வதேசத்தில் இலங்கையை பேசுபொருளாக்கிய குரங்கு!

இலங்கையில் எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு நாடு தழுவிய மின் தடையை ஏற்படுத்தி முழு நாட்டையும் இருளில் ஆழ்த்திய சம்பவத்திற்குப் பிறகு இலங்கை சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது ஒரு குரங்கு துணை மின்நிலையத்தில் நுழைந்ததால் அமைப்பு சீர்குலைந்து மின்தடை ஏற்பட்டது.

. ஆரம்பத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்று கருதப்பட்ட இந்த சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

மின் இணைப்பை சரிசெய்ய அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் உழைத்தனர்இ படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் திரும்பியது.

மின் தடையின் வினோதமான தன்மை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதுஇ இலங்கை குரங்கு எதிர்பாராத விதமாக சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24