பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை : முன்னாள் இராணுவ வீரர் கைது!

பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து, கொலை செய்து பின்னர் அவரது உடலை எரித்துவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிடுவதற்காகச் சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்து இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

அவர் முன்னர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று ராகம தலகொல்ல பகுதியில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கடந்த 5 ஆம் திகதி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து, 76 வயது பெண்ணின் கழுத்தை அறுத்து, பின்னர் உடலை தீ வைத்து எரித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிறகு அவர் அதிக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற வழக்குகளுக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்காக அவர் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.