
10 பயணிகளுடன் காணாமல் போயுள்ள விமானம்!
அமெரிக்க மாநிலமான அலஸ்காவிற்கு சொந்தமான விமானமொன்று 10 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இந்த விமானத்தில் விமானி ஒருவரும் 9 பயணிகளும் பயணித்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவருகிறது.
காணாமல் போன விமானத்தை தேடும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்