
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!
-பதுளை நிருபர்-
பதுளை சேனாநாயக சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில், கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இலக்கம் 95, பம்பஹின்ன, பெலிஹுல்ஒய பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் பனகேகின்ன கினிகங்கல, ஹல்தமுல்ல பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
