![](https://minnal24.com/wp-content/uploads/2025/02/Copy-of-minnal.24-1.jpg)
லசந்தவின் விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுவிக்கலாம்!
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் விடுவிக்கமுடியுமென சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறித்த வழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பணிக்குழாம் சார்ஜென்ட் பிரேம் ஆனந்த உடலாகம, கல்கிசை பொலிஸ்நிலைய குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸசிறி சுகதபால மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த மூவருக்கும் எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என சட்ட மா அதிபரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் மே 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியன்று இரத்மலானையின் அத்திடிய பகுதியில் படுகொலை செய்யப்பட்டதுடன், 2010 ஆம் ஆண்டு முதல் இது தொடர்பில் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.