மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு சந்தேகநபர் கைது
-யாழ் நிருபர்-
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் விசேட அதிரடிப் படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்