![](https://minnal24.com/wp-content/uploads/2025/02/FB_IMG_1737467150066.jpg)
யாழ் மாவட்டத்தில் 162 வெற்றிடங்கள்
யாழ் .மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய அரச நிறுவனத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்காவிடம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலை ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்கா தலைமை தாங்கிய நிலையில் மாவட்டத்திலுள்ள ஆளணி பற்றாக்குறை தொடர்பில் இவ்வாறு ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகம் உற்பட அதன் கீழ் இயங்கும் 15 பிரதேச செயலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினருக்கு குறைவாக பின்வரும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டி உள்ளது.
நிர்வாக கிராம உத்தியோகத்தர் 06, கிராம உத்தியோத்தர்கள் 65, முகாமைத்துவ உதவியாளர்கள் 27, அலுவலக உதவியாளர்கள் 45, சாரதிகள் 12 மற்றும் மாவட்ட பதிவாளர் தின களத்தில் 08 பேர் உள்ளடங்களாக 162 ஆளணியினர் தேவைப்பாடு இருப்பதாக கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுரா விரைவில் முப்பதாயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்