
கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த சந்தேக நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கணக்காளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இவரின் பயணப்பையிலிருந்து 53 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 35,800 “மென்செஸ்டர்” வகையைச் சேர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 179 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட சிகரெட்களுடன் சந்தேக நபரை எதிர்வரும் 05ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
