தமிழர் பாரம்பரியத்துடன் உழவர் தின விழா

-மூதூர் நிருபர்-

மூதூர் -கங்குவேலி அகத்தியர் கலை மாமன்றத்தின் ஏற்பாட்டில் உழவர் தின நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை கங்குவேலி கிராமத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது.

இதன்போது மாணவ மாணவிகளின் இன்னிசை நடனங்களுடன் அதிதிகள் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன்போது பொங்கல் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் நடன நிகழ்வுகள்,கோலம் இடல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்தோடு மாட்டு வண்டில்கள் சோடனை செய்யப்பட்டு பார்ப்போரை மகிழ்விக்கும் வகையில் இருந்தது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளர் கு.குணநாதன் கலந்து சிறப்பித்தார்.

ஏனை அதிதிகளாக மட்டக்களப்பு கல்குடா இந்து குருமார் சங்கத்தினர், மூதூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கங்குவேலி அகத்தியர் கலை மாமன்ற உறுப்பினர்கள் , கிராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.