
கிண்ணியாவில் விபத்து : இருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில், பயணிகள் பேருந்தும், வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில், இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி புறப்பட்ட வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி, வேனின் சாரதியான கிண்ணியாவை சேர்ந்த இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இன்று சனிக்கிழமை முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
