
மட்டு.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் ஜனாவின் வாகனம் விபத்து!
-கிரான் நிருபர்-
தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின், இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பயணித்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் வைத்து, இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன் உள்ள, பாதைசாரி கடவையில் வாகனத்தை நிறுத்திய போது, பின்னால் அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள், வேக கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்ட வேனில் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

