
கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டப் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபையினால் ஆரம்பித்து வைப்பு
அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக, கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில், இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன
மட்டக்களப்பு நகரின் மத்தியில் காணப்படும் கள்ளியங்காடு மயானத்தில், மாநகர சபையின் ஆணையாளர் என் தனஞ்சயன் தலைமையில், மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களால் பாரிய சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது
பெரிய நிலப்பரப்பில் அமைந்து காணப்படும் இப்பகுதியில், அண்மையில் ஏற்பட்ட அடை மழை காரணமாக, பற்றைக் காடுகள் வளர்ந்து, டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றது.
அரச அலுவலகங்கள், ஆலயங்கள், குடியிருப்புகள் இப்பகுதியில் காணப்படுவதால் இன்று இந்த சிரமமான பணி முன்னெடுக்கப்பட்டது
இறுதி கிரிகைகளுக்காக வரும் மக்களின் சுகாதார பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, இந்த பாரிய சிரமதான பணி இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்







