
சுவசெரிய சேவைக்கு 150 புதிய வாகனங்கள்!
1990 என்ற தொலைபேசி அழைப்பு ஊடாக முன்னெடுக்கப்படும் சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக 150 புதிய வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நோயாளர் காவு வண்டி சேவை புதிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
