
5 பொருட்களின் விலைகள் குறைப்பு
5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் கோதுமை மாவின் விலை தலா 10 ரூபாயால் குறைக்கப்பட்டு, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் புதிய விலை 220 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் புதிய விலை ரூ.165 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஒரு கிலோ கிராம் வெள்ளை சர்க்கரையின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 235 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை ரூ.3 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 285 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பருப்பின் விலை 1 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 209 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
