மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்
கொழும்பு – ரத்மலானை பெலெக் கடே சந்திக்கு அருகாமையில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவையைச் சேர்ந்த கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வரும் 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ரத்மலானையிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த பொலிஸ் ஜீப் வண்டியை குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மது போதையில் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் ரத்மலானை ஸ்டேஷன் வீதிக்கு அருகாமையில் குறித்த கான்ஸ்டபிள் செலுத்திச்சென்ற ஜீப் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளார்.
இதேவேளை விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குடிபோதையில் குறித்த கான்ஸ்டபில் வாகனம் செலுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு கல்கிஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 1 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்