
தொடுவானம் கலாமன்றத்தின் விழிப்புணர்வு வீதி நாடகம்!
-தாட்சாயினி நிமலேந்திரன்-
தொடுவானம் கலாமன்றத்தின் விழிப்புணர்வு வீதி நாடகம் கிரான் சந்தையில் இடம்பெற்றது..!!
சமூக மட்டத்தில் தற்போது சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில், தெளிவூட்டும் வீதிநாடகம், கிரான் பொதுச்சந்தை மற்றும் கும்புறுமூலை ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
வவுணதீவு தொடுவானம் கலாமன்ற இளைஞர் யுவதிகளின் முன்னெடுப்பில், Child Fund நிறுவனத்தின் நிதி அனுசரணையில், AU Lanka அமுல்படுத்தும் திட்டத்தின் கீழ் இவ்வீதி நாடகம் இடம்பெற்றது.
இதன்போது, சிறுவர்களை பாதிக்கும் இளவயது திருமணம், பாடசாலை இடைவிலகல், சிறுவர்களை பணிக்கு அமர்த்தல் போன்ற பல சிறுவர் துஸ்பிரியோகங்களை வெளிப்படுத்தி, மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.









