மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் சுற்றி வளைக்கப்பட்ட பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில், நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை, மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர், இன்று செவ்வாய்க்கிழமை மாலை சுற்றிவளைத்தனர்

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது, 23 பரள்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் பயணித்த  படகும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ பி தெலங்கா வலகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் , மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்

சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில்,  கொக்கட்ச்சேலை பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.