விஷமிகளால் கடைக்கு தீ வைப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை – மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் குலனி பகுதியிலுள்ள கடையொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.
இதன் போது உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கித்துல் ஊத்து, மொறவெவ பகுதியைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவரது கடையே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்