யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் நாளை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது

இந்தக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய தினம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடையாள வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி தமது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து பல்கலைக்கழகம் பற்றிய பல கருத்துக்கள் ஊடகங்களிலும்,சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று காலை விசேட கூட்டம் நடைபெற்றது

இந்தக் கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்