கிழக்கு ஆளுநரை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் 2024 ஆகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் பரீட்சை எழுதி நேர்முப்பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவிற்கு இடையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது பட்டதாரிகள் பல கோரிக்கைகளின் அடிப்படையில் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. இந்த பரீட்சை பெறுபேறுகள் எதிர்கால ஆட்சேர்ப்புக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

மேலும் குறித்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நிரந்தர தீர்வை அவர்களால் வழங்க முடியாது என்றும், அவர்களின் கோரிக்கை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஆளுநர் பதில் வழங்கினார்.

நேர்முகத் தேர்வை எதிர்கொண்டவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக மாகாண கல்விச் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் பிரச்சினைகளை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்