தவசி முருங்கையின்– மருத்துவ பயன்கள்
தவசி முருங்கையின்– மருத்துவ பயன்கள்
🌿இரைப்புநோய் குணமாக தவசு முருங்கை இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை சிகிச்சையைத் தொடரலாம்.
🌿தவசி முருங்கை முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. கோழையகற்றும், ஜலதோஷம், இரைப்பு, இருமல் ஆகியவற்றைக் குணமாக்கும்.
🌿குழந்தைகளுக்கான சளி தீர ஒரு தேக்கரண்டி அளவுக்கு, தவசி முருங்கை இலைச் சாற்றை எடுத்து, சம அளவு தேனுடன் கலந்து உட்கொள்ள கொடுக்க வேண்டும்.
🌿அடிபட்ட காயம், வீக்கம் குணமாக இலைகளை இடித்து, வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.
🌿தாவரம் முழுவதும் பச்சை நிறமான இலைகள் அடர்த்தியாக காணப்படுவதால் வைட்டமின் சத்துகளை அதிகமாக காணப்படுகிறது
🌿பச்சையாக மென்று சாப்பிட வாய்ப்புண் உடனடியாகக் குணமாகும்.
🌿பிரசவ அழுக்கு வெளியேற தவசி முருங்கை இலைச்சாறு 6 தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.
🌿தவசி முருங்கையிலை, ஒரு பிடியுடன் கொஞ்சம் உப்பையும், மிளகையும் சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேனும், சேர்த்து ஒரு தேக்கரண்டி வீதம் இருவேளை கொடுத்தால் வயிற்றுப்பிசம் உடனே தணியும்.
🌿தவசி இலையுடன் பூண்டு, மிளகு இவைகளை சமமாகச் சேர்த்து அரைத்து ஒரு மாத்திரை செய்து வெயிலில் காயவைத்து அதனை சாப்பிட்டு வர வயிற்று கோளாறுகள் நீங்கும்.
🌿இதன் பூக்கள் ஊதா நிறமாக இருப்பதால் குழந்தை பெற்ற பெண்கள், 30 மில்லி தவசி முருங்கை இலைச் சாற்றை பனைவெல்லத்துடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் 3 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் கருப்பை விரைவில் சுருங்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்