
கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
கிளிநொச்சி – இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 34 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்ரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபர்கள் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் நேற்று அதிகாலை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் குறித்த 34 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்