
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் விபத்து -வீடியோ இணைப்பு-
மட்டக்களப்பு பிள்ளையாரடி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு வேன் பிரதான வீதியோரத்திலுள்ள தூண் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் இருக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வானின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
