அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் உப செயலாளராக சம்மாந்துறை அப்றார் தெரிவு

இலங்கை பல்கலைக்கழங்களில் காணப்படும் அனைத்து முஸ்லிம் மாணவர்களையும் பிரதிநிதிப்படுத்தும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு செப்டம்பர் மாதம் இடம்பெற்றது.

இவ்அமைப்பின் தலைவர் எம்.ஸட்.எம். ஹம்மாத் தலைமையில் கொழும்பு மருதானையில் வை.எம்.எம்.ஏ (YMMA) யின் கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வருடாந்த பொது கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இடம் பெற்ற நேர்முகத் தேர்வில் உப செயலாளராக தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை அப்றாருக்கு முன்னால் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹம்மாத் ஸுஹைம்களினால் நியமனக் கடிதம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அத்துடன் கடந்த 3 வருட காலமாக கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் தலைவராகவும் அப்றார் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நியமனக் கடிதம் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட சம்மாந்துறை அப்றாரை அனைத்து முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் மற்றும் சம்மாந்துறை சமூகமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.