அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு அறிக்கை வெளியீடு
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த திட்டத்திற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவிகித ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வு பெற்ற ஊழியர் மறைந்துவிட்டால், அவரின் அதிகாரப்பூர்வ கணவன்/மனைவி-க்கு 60 சதவிகிதம் ஓய்வூதியம் கிடைக்கும்.
அதேபோல் ஊழியர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இரு பிரிவில், ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை தேர்வு செய்த பின்னர், அதனை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்