
மின்சார தூண் உடைந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்
மொனராகலை, செவனகல பகுதியில் மின்சார தூண் உடைந்து விழுந்ததில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஊழியர்கள் மின்சார தூண்களை பொருத்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
