யானை தாக்கி விவசாயி படுகாயம்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -கம்பகொட்ட பகுதியில், யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர், திருகோணமலை, எத்தாபெந்திவெவ- பகுதியைச் சேர்ந்த சின்தக விமலசேன (வயது 42) என தெரியவந்துள்ளது.

குறித்த நபர், வயல் காவலுக்கு சென்ற போது, யானை வயலுக்குள் நின்றதை அவதானித்த அவர், யானையை விரட்ட முற்பட்ட போது, யானை அவரை துரத்தி தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த குறித்த நபர், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

தற்போது காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க