வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுந்தரபுரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வாளால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடையவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் மயித்துனனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை தாக்குதலுக்கு பயன்படுத்திய வாளுடன் 30 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்