தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை இதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

அதற்கமைய, குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பார்வையிட முடியும்.

புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க கூடியவர்கள் 20,000 என்பதுடன், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏலவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை கேகாலை, காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு 141 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நுவரெலியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 139 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், மொனராகலை, அநுராதபுரம், மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு 138 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரத்தினபுரி மாவட்டத்தல் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுபுள்ளி 143 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க